மீன்பிடி டிப்ளோமாதாரிகள் மாகாண சபை முன் ஆர்ப்பாட்டம்

வடக்கு மாகாண சபையின் 8 ஆவது அமர்வு இன்று காலை 9 மணிக்கு அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமானது.

அச்சமயம், யாழ். பல்கலைக்கழகத்தில் மீன்பிடித் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்ற 65 பேர் தமக்கு நீண்ட காலமாக வேலை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, அதனை ஆட்சோபித்து, மாகாண சபையின் முன்றிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தமது கோரிக்கை கடிதத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்தனர்.

Related Posts