மீனவர்கள் இருவர் இந்தியாவில் கைது

arrest_1இந்திய கடற் பரப்பிற்குள் திசைமாறிச் சென்ற இரு மீனவர்கள் இந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பருத்தித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச தலைவர் வ.அருள்தாஸ் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இருவரும் யாழ். வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார். இவர்கள் இந்திய கோடிஸ்வரம் பகுதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடற்றொழிலுக்கு செவ்வாய்க்கிழமை படகில் சென்ற இரு மீனவர்கள் எண்ணெய் முடிவடைந்த நிலையில், திசை மாறி இந்திய கடற்பரப்பிற்குள் சென்றுள்ளனர். அதன்போது இந்திய பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பருத்தித்துறை கடற்படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

இந்த மீனவர்களை விடுதலை தொடர்பாக வல்வெட்டித்துறை கடற்றொழில் கூட்டுறவு சங்கங்கத்தினர் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் ஊடாக அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் கலந்துரையாடி வருகின்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts