மீனவர்களைக் காப்பாற்றிய மோடிக்கு நடிகர் விஜய் நன்றி

தூக்கு தண்டனையிலிருந்து ஐந்து தமிழ் மீனவர்களின் உயிரைக் காப்பாற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

vijay

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் உயிரைக் காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாந்த், லாங்லெட் ஆகிய 5 மீனவர்களுக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்திருந்தது.

இந்த 5 மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற பிரதமர் மோடி எடுத்த முயற்சிகளும், ராஜ தந்திரங்களும் மிகவும் பாராட்டுக்குரியது.

ஐந்து மீனவர்களின் விடுதலையால் ஐந்து குடும்பங்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமே சந்தோஷம் அடைந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts