மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து வடமாகாண சபை கவனயீனம்

வடபகுதி மீனவர்கள், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தாமல் வடமாகாண சபை கவனயீனமாக இருப்பதாக யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஏ.எஸ் சூசையானந்தன், வெள்ளிக்கிழமை (14) தெரித்தார்.

AS-susainathan

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் நீதிமன்றம் இழுவைமடி மீன்பிடி முறைகளை முற்றாக தடைசெய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் அதையும் மீறி அப்பகுதி மீனவர்கள் இம்மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தடுப்பதற்கு வடமாகாண சபைக்கு அதிகாரம் இருந்தும் அதை செய்யாமல் வடமாகாண சபை இருக்கின்றது.

இந்த மீன்பிடி முறையை பயன்படுத்தும் மீனவர்களின் அனுமதி அட்டைகள் பறிமுதல் செய்யப்படுவதோடு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்வதன் மூலம் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை ஓரளவு குறைக்கலாம்.

எனவே வடமாகாண சபை உடனடியாக தலையிட்டு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts