மீதொட்டுமுல்லை குப்பைமலை சரிந்து விழுந்ததில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது.
குப்பைமேடு சரிந்துவிழுந்ததில், 17 பேர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 10 பேரை மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களில் 13 வயதான பாடசாலை மாணவியும், 14 மற்றும் 15 வயதுகளுடைய மாணவிகளும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
புத்தாண்டு தினமாக 14 ஆம் திகதி பிற்பகல் 2.30க்கு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில், 100 வீடுகள் குப்பைக்குள் சிக்கிக்கொண்டன. எனினும், அங்குள்ள பலவீடுகளைச் சேர்தோர். இவ்வனர்த்தத்தின் போது, வீடுகளிலிருந்து ஓடி தப்பிவிட்டனர்.
இந்த குப்பை மலைக்கு எதிராக பிரதேசவாசிகள், பல தடவைகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும், அவை தொடர்பில் அரசியல்வாதிகள் மற்றும் உரிய அதிகாரிகள் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டினர்.