மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் 30 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வீட்டுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை கொள்வனவு செய்ய 30 குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சகல மக்களுக்கு உதவும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.