மீண்டும் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் அரச வைத்தியர்கள்

எந்த நேரத்திலும் நாடு பூராகவும் உள்ள அரச வைத்தியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் வைத்தியர் நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளரை நியமித்தல், தேசிய வைத்தியசாலைக்கு பிரதி பணிப்பாளரை நியமித்தல் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் பல திட்டங்களுக்கு எதிராகவே இந்த அறிவிப்பை அரச வைத்தியர் சங்கம் வெளியிட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகளுக்கு எந்தவொரு அறிவிப்பையும், யாருடைய உடன்பாடும் இன்றி சுகாதார திணைக்களம் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வைத்திய துறையுடன் தொடர்புபடாத அதிகாரிகள் இருவரை பணிப்பாளர்களாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது சுகாதார துறையின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Posts