மீண்டும் வெற்றிலைச் சின்னத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது ஈபிடிபி!

அடுத்து வரப்போகும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஈபிடிபி கட்சி இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

தற்போதைய சிறீலங்காவின் அதிபரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவருமான மைத்திரிபாலசிறிசேனவின் ஆலோசனைக்கமைய, கட்சியின் பொதுச் செயலர் மகிந்த அமரவீர நட்புக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையிலீடுபட்டுள்ளார்.

முதற்கட்டமாக, எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்காக ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கடந்த 5ஆம் திகதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் நடாத்தப்பட்ட பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளதாக மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விரைவில் ஈபிடிபியுடன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் அவருடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட டக்ளஸ் தேவானந்தா கடந்த தேர்தலில் கட்சியின் சின்னமான வீணைச்சின்னத்தில் போட்டியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்த தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts