மீண்டும் விஜய் படத்தை தயாரிக்கும் லைக்கா

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘விஜய் 60’ என்று அழைத்து வருகிறார்கள்.

vijay-jilla

இந்நிலையில், விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள 61வது படத்தை யார் தயாரிப்பார் என்று கேள்வி எழுந்து வந்தது. சமீபத்தில் ‘விஜய் 61’ படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது லைக்கா நிறுவனம் விஜய் படத்தை தயாரிப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

லைக்கா நிறுவனம் ஏற்கனவே விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை தயாரித்தது. மேலும் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தை தயாரித்துள்ளது. சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘2.ஓ’ படத்தையும் லைக்கா நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.

Related Posts