மீண்டும் விஜய் படத்தில் வடிவேலு, கோவை சரளா கூட்டணி!

வடிவேலு- கோவை சரளா இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்படி அவர்கள் நடித்ததில் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியான என்னம்மா கண்ணு படத்தில் அவர்களது காமெடி பெரிய அளவில் பேசப் பட்டது. அதேபோல் வி.சேகரின் காலம் மாறிப்போச்சு, விஜய்யின் வில்லு போன்ற படங்களிலும் சிறப்பான காமெடி காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் பின்னர் வடிவேலு காமெடியனாக நடித்த படங்களில் அவருக்கு ஜோடி இல்லாத தால் கோவை சரளா இடம்பெறவில்லை.

இந்த நிலையில், தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 61வது படத்தில் வடிவேலுவுடன் கோவை சரளா இணைந்துள்ளார். மீண்டும் கோவை சரளாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று வடிவேலு நினைக்காதபோதும், அவர்கள் இணைந்து நடித்த படங்களில் அதிரடி காமெடி காட்சிகள் இடம் பெற்றதை கருத்தில் கொண்டு அவர்களை படத்தில் இணைத்திருக்கிறார் அட்லி. அந்தவகையில், வடிவேலு-கோவைசரளா காம்பினேசன் மட்டுமின்றி விஜய்யுடன் இணைந்து அவர் நடிக்கும் காமெடி காட்சிகளும் இப்படத்தில் உள்ளதாம்.

Related Posts