விஜய்-அஜித் என இருவரின் படங்களுக்கு தான் எப்போதும் போட்டி இருக்கும். அந்த வகையில் சூர்யா தனக்கென்று ஒரு தனி ட்ராக் அமைத்து அதில் பயணிப்பவர்.
இந்நிலையில் சில வருடங்களுக்கும் முன் வேலாயுதம், 7ம் அறிவு ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்தது.
இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது மீண்டும் இவர்கள் படங்கள் மோதும் நிலை உருவாகியுள்ளது. விஜய் நடிப்பில் புலி, சூர்யா நடிப்பில் மாஸ் ஆகிய இரண்டு படங்களும் மே மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது.