மீண்டும் விஜய்யுடன் இணைவேன் – முருகதாஸ்

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கத்தி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். விஜய் இப்படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

Murugadoss_vijay

பல தடைகளை தாண்டி வெளிவந்த இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. வெளியான முதல் நாளில் ரூ.23.50 கோடி வசூலாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ‘துப்பாக்கி’ படமும் சூப்பர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து இப்படம் ஹிட்டாகியுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் முருகதாஸ்.

இந்த இரண்டு படங்கள் வெற்றி பெறவே மீண்டும் விஜயை வைத்து படம் இயக்க உள்ளதாக முருகதாஸ் கூறியுள்ளார். கத்தி படத்தை தொடர்ந்து சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து இந்தியில் படம் எடுக்கவுள்ளார் முருகதாஸ். இப்படத்தின் வேலைகள் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது.

விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கும் படத்திலும், அதனை தொடர்ந்து அட்லி இயக்குவிருக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படங்கள் முடிந்த பிறகு முருகதாஸ்-விஜய் கூட்டணியில் மீண்டும் சூப்பர் ஹிட் படம் உருவாகும் என எதிர்பார்க்கலாம்.

Related Posts