மீண்டும் விஜய்யுடன் இணையும் தேவி ஸ்ரீ பிரசாத்

தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவி ஸ்ரீபிரசாத்.தமிழில் இவர் நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் ஏனோ இங்கு ஒரு பெரிய பெயரை அவரால் பெற முடியவில்லை.

vijay_devi_sri_prasad

சமீபத்தில் கூட அஜீத் நடித்த வீரம் படத்திற்கு இசையமைத்தார். அப்படத்தின் பாடல்கள் எதிர்ப்பார்த்தார் போல் ஹிட்டடிக்கவில்லை.

இந்நிலையில், சுமார் 9 வருடங்களுக்கு பிறகு விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கப் போகும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.

இவர் இதற்கு முன் விஜய்யின் சச்சின் படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்.

சாதாரணமாகவே விஜய் படம் என்றால் பாடல்கள் எல்லாம் மாஸ்ஸாக தான் இருக்கும்.

தேவி ஸ்ரீபிரசாத்துக்கு அது கை வந்த கலையாச்சே, அதனால் இப்படம் அவருக்கு தமிழில் பெயர் வாங்கி தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Posts