மீண்டும் வயதான கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த்

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த கபாலி படத்தில் வயதான கதாபாத்திரத்தில் நடித்தார். இளமை தோற்றத்தை விட வயதான தோற்றத்திற்குத்தான் அதிகமான காட்சிகள் படத்தில் இருந்தன. தன் வயதுக்குரிய தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்ததைப் பலரும் பாராட்டினர்.

இன்னமும் அவர் இருபது வயது கதாநாயகிகளுடன் டூயட் பாடுவதெல்லாம் அவருக்குச் சரியாக இருக்காது என்றே பல விமர்சகர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். 2.0 படத்தில் அப்படி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இருந்தாலும் ரஞ்சித் அடுத்து இயக்க உள்ள படத்தில் ரஜினிகாந்த் வயதான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

கபாலி கதாபாத்திரத்தை விட இந்தப் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் வலிமையானதாகவும், புதிதாகவும் இருக்கும் என்கிறார்கள். இதற்காக ரஜினிக்கு பலவிதமான தோற்றங்களை டிசைன் செய்து பார்த்து வருகிறார்களாம். அதிலிருந்து ஒரு தோற்றத்தைத் தேர்வு செய்து அதே போல ரஜினிக்கு மேக்கப் செய்ய உள்ளார்களாம்.

மே மாதம் மத்தியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. ரஜினிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை வித்யா பாலன் நடிக்கலாம் என்கிறார்கள். அது பற்றிய விவரங்களை விரைவில் அறிக்கலாம். ரஜினி நடித்துள்ள 2.0 படம் தீபாவளி வெளியீடாக வர இருப்பதால் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள இந்தப்புதிய படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வர வாய்ப்புகள் அதிகம்.

Related Posts