மீண்டும் ரஜினி-கமலுடன் நடிப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை! ரம்யா கிருஷ்ணன்

படையப்பா ரம்யாகிருஷ்ணன், திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையில் பிசியானவர், தொடர்ந்து சினிமாவிலும் பிசியாகி விட்டார்.

முக்கியமாக, ராஜமவுலியின் பாகுபலி படத்தின் முக்கிய வேடத்தில் நடித்த பிறகு, இப்போது அதே படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

அதோடு, கமலின் சபாஷ்நாயுடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் ரம்யாகிருஷ்ணன், ரஜினியின் 2.ஓ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

ஆக, மறுபடியும் மேல்தட்டு ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார் ரம்யாகிருஷ்ணன்.

இந்த நேரத்தில் அவரது மார்க்கெட்டை மறுபடியும் சூடு பிடிப்பதை அறிந்த சில பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள், ரம்யா கிருஷ்ணனை தங்களது படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய அணுகினர்.

ஆனால் அவரோ, மறுபடியும் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறேன். இத்தனை பெரிய நடிகர்களுடன் மறுபடியும் நடிப்பேன் என்று நான் நினைத்தே பார்த்ததில்லை. அதனால் உற்சாகத்துடன் நடித்துக்கொண்டிருக்கிறேன். மேலும், பெரிய ஹீரோ படங்களில் நடித்து வரும் நேரத்தில் அறிமுக நடிகர்களுடன் நடித்தால், தொடர்ந்து பெரிய ஹீரோக்களின் படங்கள் கிடைக்காது என்று தனது நிலையை பக்குவமாக எடுத்துச் சொல்லி அந்த வாய்ப்புகளை திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறார் ரம்யாகிருஷ்ணன்.

Related Posts