நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளியேன் என பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனமான 100 நாட்களில் புதிய நாடு, கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவின் திறந்தவெளி அரங்கில் தற்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.
விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போது விஹாரமஹாதேவி பூங்காவில் மின்தடையும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ஏப்ரல் 23ஆம் திகதியோ அல்லது அதற்கு பின்னரோ நாடாளுமன்றத்தைக் கலைத்து இடைக்கால அரசாங்கமொன்றை ஏற்படுத்துவார் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் 100 நாள்களுக்குள் தான் நிறைவேற்ற திட்டமிட்டுள்ள விடயங்களை அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெறும் கட்சியிலிருந்தே பிரதமர் நியமிக்கப்படுவார். இரண்டாவது அதிகூடிய ஆசனங்களை பெறும் கட்சியைச் சேர்ந்தவர் பிரதிப் பிரதமராக நியமிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரலுக்கு பின்னர் உருவாகும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை, சகல கட்சிகளையும் உள்ளடக்கியிருக்கும். தேசிய அரசாங்கத்தின் கீழ் முக்கியமான விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்காக கொள்கைத் திட்டமொன்று உருவாக்கப்படும்.
தேர்தலில் வெற்றிபெற்றால் நான் ஜனவரி 10ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்வேன். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக அறிவிப்பேன்.- என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞாபனத்தின் ஆங்கில வடிவம்