மீண்டும் பொலிஸ் பதிவு முறைமை ஆரம்பம்!!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க பொலிஸ் பதிவு முறைமை மீளவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளிலும் தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகம் இந்த உத்தரவினை நேற்று பிறப்பித்துள்ளது.

தற்காலிக அடிப்படையில் ஒர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றுவோர் மற்றும் குடியிருப்பவர்கள் தங்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அத்துடன் கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் பலவற்றுக்கு தற்காலிக அடிப்படையில் தங்கியிருந்தவர்கள் பணியாற்றியவர்களே பொறுப்பு என்ற காரணத்தினால் இவ்வாறு பதிவிற்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வறாயினும் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்கள் பற்றி பொலிஸ் நிலையம் அறிந்திருக்க வேண்டும், அந்தந்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தற்காலிக அடிப்படையில் தங்கியிருப்பவர்களினால் குற்றம் இழைக்கப்பட்டால் அதற்கான பொறுப்பினை அந்த பொலிஸ் நிலையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சேயா சிறுமி மற்றும் கவிந்து என்ற சிறுவன் கொலைகளில் பிரதான சந்தேக நபர்கள் தற்காலிக அடிப்படையில் தங்கியிருந்தவர்களாகும்.

கவிந்து கொலையை மேற்கொண்ட நபர் கற்குழியில் காவலராக கடமையாற்றி வந்தவர் எனவும், பதிவு செய்யப்பட்ட ஓர் குற்றவாளி என்பதனை அந்தப் பிரதேசத்தில் இருப்பவர்கள் அறிந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் கணவன், மனைவி மற்றும் பிள்ளையை கொடூரமாக கொலை செய்தவரும் இதற்கு முன்னர்கொலைக் குற்றச செயல்களுடன் தொடர்புடையவர் என்பதனை எவரும் அறிந்திருக்கவில்லை.

பிரதேச பொலிஸாருக்கும் சந்தேக நபர் பற்றிய விபரங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை.

சிலாபம் பிரதேசத்தில் தும்பு ஆலை ஒன்றில் குடும்பத்தையே படுகொலை செய்த நபரும் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான குற்றச் செயல்களை தடுக்க பொலிஸார் சில திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Related Posts