இராணுவத் தேவைகளுக்கான யாழ்ப்பாணத்தில் சுவீகரிப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை அளவிடுமாறு நில அளவைத் திணைக்களத்திற்கு உயர் மட்டத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கீரிமலையிலுள்ள 148 ஏக்கர் காணிகளை அளவிடும் பணிகள் பொலிஸ் பாதுகாப்புடன் அளவிடும் பணிகள் இன்று தொடக்கம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்காணி அளவிடும் பணிகளை தடுத்து நிறுத்துவதற்கு பொதுமக்கள் அணிதிரள தயாராகுமாறு வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
யாழில் உள்ள பொதுமக்களுடைய பெரும் தொகையான உறுதிக் காணிகள் இராணுவத்தின் தேவைகளுக்காக சிவீகரிக்கப்படவுள்ளதாக அறிவித்தல் துண்டுபிரசுரங்கள் ஒடப்பட்டிருந்தன.
இவ்வாறு சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்ட காணிகளை சட்ட ரீதியாக சுவீகரிப்பதற்கு காணிகளை அளவிடும் பணிகளை அண்மைக்காலமாக நில அளவைத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வந்திருந்தனர்.
இதற்கு குறித்த காணி உரிமையாளர்களும், அரசியற்கட்சியினரும் இணைந்து காணி அளவிட வந்த நில அளவைத் திணைக்களத்தினரை தடுத்து நிறுத்தியிருந்தனர்.
குறிப்பாக கீரிமலையிலுள்ள 148 ஏக்கர் காணியினை சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் 4முறை வந்தனர் இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.