மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி சேரும் விஜய்சேதுபதி

விக்னேஷ் சிவன் இயக்கிய ‛நானும் ரவுடிதான்’ படத்தில் முதன்முறையாக ஜோடி சேர்ந்தனர் விஜய்சேதுபதியும், நயன்தாராவும். அந்தப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

nayan-sethu-pathy

இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் இணைய இருக்கிறார்கள். டிமான்டி காலனி இயக்குநர் அஜய் ஜானமுத்து, தற்போது ‛இமைக்கா நொடிகள்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அதர்வா ஹீரோவாக நடிக்க அவருடன் நயன்தாரா முக்கியமான ரோலில் நடிக்கிறார். இதன்படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.

இதனிடையே, ‛இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாரா, அதர்வாவிற்கு அக்காவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் படத்தில் நயன்தாராவுக்கு ஜோடி இருப்பதாகவும், அவர் விஜய் சேதுபதி என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கெஸ்ட் ரோல் என்றாலும் தனது ரோல் மிகவும் முக்கியமானதாக இருப்பதால் விஜய் சேதுபதி நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம். விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Related Posts