மீண்டும் நடிக்க களம் இறங்கும் விவேக்

சமீபத்தில் நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 13. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரசன்னா, சிகிச்சை பலனின்றி அக்டோபர் 29ம் தேதி உயிரிழந்தார். இதனால் விவேக்கும் அவரது குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்தது.

மகன் பிரிவினால் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த விவேக், தற்போது மீண்டும் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, நான் என் மகன் பிரிவில் இருந்து வெளியே வந்துவிட்டேன். அதாவது மீண்டும் நான் எனது பழைய வாழ்க்கைக்கு திரும்பி உள்ளேன். வழக்கம் போல் நாளையில் இருந்து நான் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும், வழக்கம்போல் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

Related Posts