மீண்டும் ஜெயம் ரவியுடன் மோதும் அரவிந்த் சாமி

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தார். ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்ற இப்படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. மோகன் ராஜா இப்படத்தை இயக்கியிருந்தார்.

தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியை மிரட்டிய அரவிந்த் சாமி தற்போது மீண்டும் புதிய படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக மிரட்ட இருக்கிறார்.

இந்த புதிய படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லஷ்மன் இயக்க இருக்கிறார். இப்படத்தில் இருவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட இருக்கிறதாம். இதில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். ஜனவரி முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை வெளியிட இருக்கின்றனர்.

லஷ்மன் இயக்கிய ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts