மீண்டும் ஜி.வி.பிரகாஷுடன் இணையும் ஆனந்தி

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

GV-Pirakash-Ananthy

தற்போது இந்த ஜோடி புதிய படம் மூலம் இணையவுள்ளது. ஜி.வி.பிரகாஷை வைத்து ‘டார்லிங்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இந்த படத்தை இயக்க இருக்கிறார். லைக்கா புரொடக்‌ஷன் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது.

இப்படத்தை தவிர ஜி.வி.பிரகாஷ் ‘புருஸ் லீ’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார்.

Related Posts