மீண்டும் சூப்பர்ஸ்டாருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யாராய்?

இந்திய சினிமாவையே புரட்டி போட்ட படம் எந்திரன். 2010ல் வெளியான இப்படத்தின் வசூல் இந்தியளவில் தற்போதும் டாப் 10ல் தான் இருக்கிறது.

rajini_aishwaryarai001

ரஜினி-ஐஸ்வர்யா என உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் தீவிரமாக உள்ளார். இதிலும் ரஜினியை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் ஐஸ்வர்யா நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்ததால் வேறு நடிகையை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால் தற்போது மீண்டும் ஐஸ்வர்யா பாலிவிட்டில் நடிக்க தொடங்கியிருப்பதால் அவரையே ஜோடியாக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts