கடந்த மாதங்களில் இல்லாத அளவில் மிகப்பெரிய ஷெல் தாக்குதலை உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ளது.
75 ட்ரோன்களில் 71 ட்ரோன்களை உக்ரைன் விமானப் படை சுட்டு வீழ்த்தியுள்ளதுடன் இதில் 40 ட்ரோன்கள் உக்ரைனிய தலைநகர் கீவ் மீது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
ரஷ்யா நடத்திய இந்த திடீர் பயங்கர ட்ரோன் தாக்குதலில், தலைநகர் கீவ் பகுதியில் உள்ள 77 குடியிருப்பு கட்டடங்கள் 120 நிறுவனங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் பாகங்கள் தலைநகர் கீவ்வின் பல பகுதிகளில் விழுந்து இருப்பதாகவும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களில் தீ பற்றி இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை சற்று மந்த நிலைக்கு சென்று இருப்பதோடு, அவ்வப்போது ஏவுகணை மற்றும் ராக்கெட் தாக்குதலை நடத்தி வந்தது.
இந்நிலையில் கடந்த மாதங்களில் இல்லாத அளவில் மிகப்பெரிய ட்ரோன் ஷெல் தாக்குதலை நேற்று இரவு ரஷ்யா அரங்கேற்றியுள்ளது.