மீண்டும் சியான் விக்ரமுடன் இணையும் த்ரிஷா

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கவிருக்கும் ‘சாமி 2’ கதாநாயகியாக நடிகர் த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

இத்தகவலை ‘சாமி 2’ தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உறுதி செய்துள்ளார்.

மேலும், மீண்டும் தனது வெற்றிக்கு கூட்டணியில் இணைய ஆர்வமாக உள்ளதாக த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் படமான ‘சாமி’ திரைபபடத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவிருக்கும் ‘சாமி 2’ திரைப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் லஞ்சம் வாங்காத நேர்மையான காவல்துறை அதிகாரியாக சியான் விக்ரம் நடித்திருந்தார்.

Related Posts