மீண்டும் சந்திரிக்கா!

திடீர் வௌிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று (16) நாடு திரும்பவுள்ளார்.

அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு பெற்று கொடுத்தது தொடர்பாக விசேட கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடும் என்றும் தெரியவருகிறது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ள அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தல் கூட்டங்கள் பலவற்றில் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts