மீண்டும் கைகோர்க்கும் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ்!

விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்து தமிழில் வெளியான மெளனகுரு படத்தை அகிரா என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தார்.

அதைத் தொடர்ந்து சாம்பவமி என்ற படத்தை மகேஷ்பாபுவை நாயகனாக வைத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படமாக்கி வருகிறார். ராகுல்ப்ரீத்சிங் நாயகியாக நடிக்கும் அப்படத்தில் பரத், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி, நதியா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அப்படம் மார்ச் மாதம் வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட் டுள்ளது.

இந்த நிலையில், மகேஷ்பாபு படத்தை முடித்ததும் அஜீத் நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்கு வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அட்லி இயக்கும் தனது 61வது படத்தில் நடித்து முடித்ததும் முருகதாசுடன் மீண்டும் கைகோர்க்கிறாராம் விஜய். மேலும், சமீபகாலமாக பட தயாரிப்புகளில் ஈடுபடாத விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தை தானே பிரமாண்டமாக தயாரித்து நடிக்கிறாராம்.

Related Posts