மீண்டும் குறைந்தது கோதுமை மாவின் விலை!

கோதுமை மாவின் மொத்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் கோதுமை மாவின் மொத்த விலை 290 ஆக காணப்பட்டதுடன், தற்போது 25 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கோதுமை மாவின் புதிய மொத்த விற்பனை விலை 265 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Posts