மீண்டும் ஓ போடும் சீயான் விக்ரம்!

சேது, காசி, பிதாமகன், அந்நியன் என சில படங்களில் மாறுபட்ட கெட்டப்பில் நடித்தவர் விக்ரம். அதனால் தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்தபடியாக ரிஸ்க் எடுத்து நடிக்கக்கூடிய ஒரு நடிகர் என்கிற இமேஜ் அவருக்கு உருவானது.

ஆனபோதும், சமீபகாலமாக விக்ரமின் திறமைக்கு தீனி போடக்கூடிய அழுத்தமான கதாபாத்திரங்கள் அவருக்கு அமையவில்லை. அதனால் இள வட்ட நடிகர்களின் பாணிக்கு திரும்பி விட்டார்.

அதாவது, தற்போது விஜயசந்தர் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் வட சென்னைவாசியாக நடித்து வரும் விக்ரம், அந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடிக்கிறார்.

குறிப்பாக, ஏற்கனவே சரண் இயக்கத்தில் அவர் நடித்த ஜெமினி படம் போன்ற கெட்டப்பில் நடிக்கும் விக்ரமிற்கு குத்துப்பாடலும் உள்ளதாம்.

அதனால், ஜெமினி படத்தில் இடம்பெற்ற ஓ போடு பாடலைப்போன்று இந்த பாடல் இருந்தால் பெஸ்ட்டாக இருக்கும் என்று அப்படத்திற்கு இசையமைக்கும் தமனிடம் கூறியிருக்கிறாராம் விக்ரம்.

Related Posts