மீண்டும் ஒரு புயல் எச்சரிக்கை

கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்று சுழற்சியால் வர்தா புயல உருவாகி சென்னையில் கரையை கடந்த நிலையில் மீண்டும் அந்தமானுக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

அந்தமானுக்கு கிழக்கே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த நான்கு நாட்களில் தமிழக கடலோரப்பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த வாரம் வந்த வர்தா புயலில் பாதிக்கப்பட்ட சென்னை வாசிகள் மின்சாரம், தண்ணீர் இல்லாமல், இன்னும் மீளமுடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு புயல் அறிவித்தல் இடம் பெற்றுள்ளது.

வர்தா புயலின் தாக்கத்தால் வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts