மீண்டும் ஒரு எழுக தமிழ் எழுக்கூடாது என தமிழ்மக்கள் பேரவையில்கூட அழுத்தங்கள் !

யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்றது போன்ற எழுக தமிழ் பேரணி மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரும் மிக்க கவனமாக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் கிளிநொச்சியில் மக்கள் சந்திப்பொன்றை நடத்தினர். இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கப்பட்டதன் நோக்கம் குறித்தும், தற்போதைய அரசியல் நிலமைகள் குறித்தும் மக்களுக்கு தெளிவுபடுத்தினர்.

இதன்போது கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

ஜனநாயக ரீதியாக தமது தரப்பு நியாயத்தை கூறி மக்கள் அணி திரள தயாராகவுள்ளனரோ அங்கே அரசியல் ரீதியாக அழுத்தத்தை பிரயோகிக்க முடியும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மிகவும் மோசமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

உரிமை போராட்டத்திற்கு துரோகமிழைப்பவர்களை தடுக்க வேண்டும் என்ற உணர்வோடுதான் தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்த எழுக தமிழ் பேரணியில் மிகப்பெரியளவில் மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மீண்டும் ஒரு எழுக தமிழ் நடக்கக்கூடாது என்பதில் திட்டமிட்ட ரீதியில் பல தரப்புக்கள் செயற்பட்டு வருவதுடன், இந்தக் கருத்துக்களால் தமிழ்மக்கள் பேரவையில்கூட அழுத்தங்கள் உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts