மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் எரிபொருள் இருப்பை முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபணம் தெரிவித்துள்ளது.

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் எதிர்வரும் இரண்டு மாதங்களின் பின்னர் நாட்டில் எரிபொருள் கையிருப்பு எவ்வாறு அமையப்போகின்றது என்பது குறித்து எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் இணைந்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன.

எவ்வாறாயினும் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமாயின் முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட QR முறையையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதா அல்லது வேறு நடவடிக்கைகளை முன்னெடுப்பதா என்பது குறித்து கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் சினோபெக் நிறுவனம் நாட்டில் வெற்றிகரமாக எரிபொருள் விநியோகத்தை முன்னெடுத்து செல்வதனால் எரிபொருள் தட்டுபாடு ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவடையும் என இலங்கை பெற்றோலிய கூட்டுதாபணம் தெரிவித்துள்ளது.

Related Posts