மீண்டும் உடல் கருகிய நிலையில் நான்கு சடலங்கள் தெஹிவளையில் மீட்பு

தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மின்சாரம் தாக்கியதில் இவர்கள் நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல்கள் கருகி இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறுகின்றது.

இன்று காலை 10 மணியாளவில் தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Posts