மீண்டும் இணையும் கமல் மாதவன்

கமல் நடித்த பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட படங்களில் அவருடன் இணைந்து ஜெயராம், பிரபு, ரமேஷ்அரவிந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர்.

kamal-mathavan

ஆனால் காமெடி படங்களில் மட்டுமே அப்படி பல நடிகர்களை தன்னுடன் கூட்டணி சேர்த்துக்கொண்ட கமல், ஆக்சன், செண்டிமென்ட் படங்களில் தான் மட்டுமே ஷோலோவாக நடித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது உத்தமவில்லனில் டபுள் ரோலில் நடித்து வரும் கமல், அதற்கடுத்து, த்ரிஷ்யம் ரீமேக்கிலும் ஷோலோவாகத்தான் நடிக்கிறார்.

ஆனால் அதையடுத்து, தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா நடிப்பில் வெளியாகியுள்ள மனம் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்கயிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

Manam

சமீபத்தில் அப்படத்தை பார்த்து ரசித்த கமல், நாகேஸ்வரராவின் நடிப்பு தன்னை வெகுவாக பாதித்ததாக குறிப்பிட்டிருந்தார். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்த அந்த படத்தை பார்த்து முடித்ததும், தமிழ் ரீமேக்கில் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாராம் கமல்.

நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் கமல் நடிக்க, நாகார்ஜூனா வேடத்தில் மாதவன் நடிக்கிறாராம். ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய அன்பே சிவம் மற்றும் மன்மதன் அம்பு படங்களில் அவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும், நாகசைதன்யா வேடத்துக்கு அப்படம் தொடங்கும் நேரத்தில் இன்னொரு இளவட்ட நடிகரிடமும் கால்சீட் கேட்க திட்டமிடப்பட்டுள்ளதாம். ஆக, விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடித்த நண்பன் படத்தையடுத்து தமிழில் மீண்டுமொரு மல்டி ஹீரோ படம் ரெடியாகி விட்டது.

Related Posts