மீட்கப்பட்ட வெடிபொருட்களுக்கும் கிழக்கு முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு?

sheel-bomb-minesயாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியிலுள்ள காணியிலிருந்து சில வெடிபொருட்கள் நேற்று முன்தினம் காலை மீட்கப்பட்ட வெடி பொருட்களை கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லீம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களினால் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

யாழில் விரைவில் வடமாகாண சபைத் தேர்த்தல் நடைபெறவுள்ள சூழலில் இந்த வெடி பொருட்கள் தேர்த்ல் களத்தில் பயன்படுத்துவதற்காக இங்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்னர்

யாழ். முஸ்லிம் வட்டாரம் ஆஸாத் வீதியிலுள்ள காணியிலிருந்தே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.

காணி உரிமையாளரான பொலிஸ் உத்தியோகத்தர் கைவிடப்பட்டிருந்த பாழடைந்த கிணற்றினை சுத்தம் செய்துள்ளார்.

அதன்போதே உரப்பையில் இடப்பட்ட நிலையில் ஷல் ரக வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக அண்மையிலுள்ள இராணுவ முகாமிற்கு அறிவித்ததை அடுத்து, இராணுவத்தினரால் அந்த வெடி பொருட்கள் இராணுவ பொறியியல் பிரிவிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இந்த வெடி பொருட்கள் நாட்டு வெடி பொருட்கள் ரகத்தை ஒத்திருப்பதாகவும் இது தொடர்பில் விசாணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்

தொடர்புடைய செய்தி

யாழில் வெடிபொருட்கள் மீட்பு

Related Posts