மிஸ்டர் எக்ஸ் சஸ்பென்ஸ் உடைந்தது?

இயக்குனர் கவுதம் மேனன் படத்துக்கு படம் ஏதோ ஒரு வகையில் புதுமை செய்து தன் படத்தை பற்றி பேச வைத்துக் கொண்டிருப்பார். அந்த வரிசையில் அவர் தற்போது இயக்கி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இரண்டு பாடல்களை வெளியிட்டிருப்பவர், இசை அமைப்பாளர் யார் என்பதை வெளியிடாமல் மிஸ்டர் எக்ஸ் என்ற பெயரில் சஸ்பென்சாக வைத்திருந்தார். படத்தின் போஸ்டர்களிலும் இசை அமைப்பாளர் யார் என்பதை குறிப்பிடவில்லை.

இசை அமைப்பாளர் யார் என்பதை கடைசி நேரத்தில்தான் அறிவிப்பேன் என்று கூறியிருந்தார் படத்தின் ஹீரோ தனுசும், இசை அமைப்பது யார் என்று எனக்குத் தெரியாது என்று கூறினார். வெளியான பாடல்களை கேட்டவர்கள் இதற்கு இசை அமைத்திருப்பது ஏ.ஆர்.ரகுமான் அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் என்றார்கள்.

இப்போது அந்த சஸ்பென்ஸ் கவுதம்மேனன் அறிவிக்காமலேயே உடைந்து விட்டது. பாடல்களுக்கு இசை அமைத்திருக்கும் அந்த மிஸ்டர் எக்ஸ் கவுதம் மேனனே தான் என்கிறார்கள். படத்தின் அனைத்து பாடல்களுக்கும் அவர் தான் இசை அமைத்திருக்கிறாராம். பின்னணி இசை அமைப்பது ராஜதந்திரம் படப் புகழ் தர்புகா சிவா என்கிறார்கள். கவுதம் மேனன் இசை ஆர்வம் மிக்கவர். பல சினிமா மேடைகளில் பாடியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts