மிஷ்கினின் துப்பறிவாளனில் கே.பாக்யராஜ்!

புலனாய்வு சம்பந்தப்பட்ட கதையில் மிஷ்கின் இயக்கும் படம் துப்பறிவாளன். இந்த படத்தை தயாரித்து நாயகனாக நடிக்கிறார் விஷால். அக்ஷ்ராஹாசன், ஆண்ட்ரியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இந்த படத்தில், பிரசன்னா வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தில் ஒரு புலனாய்வு சீனியர் ஆபீசராக நடிப்பதற்கு சில நடிகர்களை பரிசீலனை செய்து வந்த மிஷ்கின், டைரக்டர் கே.பாக்யராஜை அந்த வேடத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

மேலும், 1985ல் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் ரஜினி நடித்த நான் சிகப்பு மனிதன் படத்தில் சிஐடியாக நடித்தவர் கே.பாக்யராஜ்.

அவர் நடித்த அந்த வேடத்துக்கு தியேட்டரில் பெரிய அளவில் கைதட்டல் கிடைத்தது. அதை மனதில் கொண்டுதான் இந்த வேடத்தில் அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று அவரை கமிட் செய்துள்ளார்களாம்.

அதோடு, இதுவரை தனது படங்களில் கே.பாக்யராஜ் நடித்திராத நிலையில், இந்த படத்தில் அவர் நடிப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் விஷால், கே.பாக்யராஜ் சார் துப்பறிவாளன் படத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts