மிளகாய்த் தூள்வீசி சங்கிலி அறுப்பு!

புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினநிகழ்விற்கு சென்று வந்த மாணவி மீது மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு மந்துவில் 8 ஆம் வட்டாரப்பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர்தின நிகழ்வில் கலந்துவிட்டு 7ஆம் ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவர் உள்வீதியாக வீட்டிற்கு சென்று கொண்டிருக்கையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இவ்வாறு தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் மாணவி மீது மிளகாய்த் தூள் வீசப்பட, மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சங்கிலியினை அபகரித்து சென்றுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் கொள்ளையிட்ட கொள்ளைக்கும்பல் தற்போது பகல்வேளைகளில் இவ்வாறான கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இரவு வேளைகளில் இளைஞர்கள் விழிப்புகாவல்களில் அண்மைய நாட்களாக ஈடுபட்டுவரும் நிலையில் நேற்று பட்டப்பகலில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts