மிருதன் 2ம் பாகம் தயாராகிறது

ஜெயம்ரவி, லட்சுமிமேனன், நடித்துள்ள மிருதன் படம் இன்று வெளியாகி உள்ளது. நாணயம், நாய்கள் ஜாக்கிரதை படங்களை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி உள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார், வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.

miruthan-jeyam-ravi

இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளிவரும் சோம்பிஸ் வகை திரைப்படமாகும். ஒருவித வைரசால் பாதிக்கப்படும் மக்கள் மிருகங்களாக மாறி ஒருவரை ஒருவர் கடித்து திண்ண ஆரம்பிப்பார்கள். அவர்களை ஒரு ஹீரோ அழிப்பார். மிருதன் படத்தின் கதையும் அதுதான். ஊட்டியில் அப்படி வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உருவாகிறார்கள். அதை தடுப்பதற்கான மருந்து கோயம்புத்தூரில் இருக்கிறது. ஹீரோ ஜெயம்ரவி (டிராபிக் இன்ஸ்பெக்டர்) டாக்டர் லட்சுமிமேனனை சோம்பிஸ்களிடம் இருந்து காப்பாற்றி அந்த மருந்து இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்வதுதான் கதை.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. மிருதன் படத்தின் கதைப்படி லட்சுமிமேனைனையும், தனது தங்கையையும் சோம்பீஸ்களிடமிருந்து காப்பாற்றும் ஜெயம்ரவி சோம்பீஸ்களால் கடிக்கப்பட்டு அவரும் சோம்பீஸாக மாறி விடுகிறார். அப்படி மாறியவர் சென்னை செல்லும் பஸ்சின் கூறையில் அமர்ந்து சென்னைக்கு செல்வதோடு முடிகிறது படம். “மிருதன் 2 தொடர்கிறது” என்ற எண்ட் டைட்டில் கார்டுடன்தான் படம் முடிகிறது. அதனால் பாகம் 2வின் கதை சென்னையில் நடக்கிறது. சோம்பீஸாக சென்னைக்குள் நுழையும் ஜெயம்ரவியை அழிக்க வரும் 2ம் பாக ஹீரோ யார் என்பது இப்போதைய கேள்வி. ஜெயம்ரவி வில்லன் என்பது உறுதியான விஷயம்.

Related Posts