மிருகங்களை வேட்டையாடியோர் சரணடைந்தனர்

நக்கிள்ஸ் வனப்பகுதியில், பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளை வேட்டையாடியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (03), தமது சட்டத்தரணியுடன் பன்விலை பொலிஸில் சரணடைந்துள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் தொடர்பில் ஏற்கெனவே இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களாக வன விலங்குகளை வேட்டையாடிய சிலர் அவற்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இந்தப் புகைப்படங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில், இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பிரதான சந்தேகநபர் உட்பட ஏனைய நால்வரும், நேற்று சரணடைந்தனர்.

குறித்த நபர்கள் ஐந்து வருடங்களுக்கு முன் வன விலங்குகளை வேட்டையாடிய படங்களே இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

animal-veddai-gun

animal-veddai-2

animal-veddai-1

Related Posts