மிரட்டலுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெறும்!

thellipplai_poraddam_02வலி.வடக்கு மக்களால் இன்று மேற்கொள்ளப்பட உள்ள உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி இடம்பெறும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 8மணிக்கு மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் ஆரம்பமாகும் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தும் 12,13,14,15,16 ஆகிய 5 தினங்களும் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

எனினும் குறித்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் நடைபெற ஏற்பாடாகி இருக்கின்ற நிலையில் வலி.வடக்கு தவிசாளர் எஸ். சுகிர்தன், வலி.வடக்கு உப தவிசாளர் எஸ் . சஜீவன் அகிய இருவரது தொலைபேசிக்கு நேற்று முன்தினம் இரவு அழைப்பு மூலமும் குறுந்தகவல் மூலமும் இனந்தெரியாதோரால் மிரட்டல் விடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் குறித்த இருவரது தலைகளும் துண்டிக்கப்பட்டு தலையற்ற முண்டமே வீட்டுக்கு வரும் என மிரட்டியதுடன் இவர்கள் இருவரது வீட்டிற்கு முன்னால் மாட்டின் தலையினை கொண்டுவந்து வைத்துவிட்டும் தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் இதுகுறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான மிரட்டல்களுக்கு அஞ்சாது திட்டமிட்டபடி எமது போராட்டம் முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டுக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts