மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்! பல்கலைக்கழக ஆசிரியர்கள் அறிவிப்பு

பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஜூலை 4 ஆம் திகதி தொடக்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர் என்றும் தாம் எவ்விதமான பயமுறுத்தலுக்கும் அஞ்சி தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப் போவதில்லை எனவும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் கூறியுள்ளது.தனக்கு அல்லது தனது குடும்பத்தினருக்கு விடுக்கப்படும் பயமுறுத்தலுக்கு தான் பணியப் போவதில்லை என நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் அந்தச் சம்மேளனத்தின் தலைவர் நிமல் ரஞ்சித் தேசிறி கூறினார்.

இந்த வார முற்பகுதியில் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் எனத் தம்மை அடையாளப்படுத்திய இருவர், அவரின் 17 வயது மகள் பற்றிய தகவல்களைக் கேட்டுக் கொண்டு தேவசிறியின் அயலுக்கு இரண்டு தடவை வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையிட்டு அடுத்த நாள் உயர்கல்வி அமைச்சரிடம் முறையிட்ட போது அவர் “இப்போது இந்த புதிய கதையை காவித்திரிகிறீர் களா?’ என கேட்டார். அமைச்சர் தனது முறைப்பாட்டை கணக்கில் எடுக்க வில்லையென தேவசிறி கூறினார்.

அமைச்சருடனான பேச்சுக்களில் நாம் சம்பளங்களை முக்கியப்படுத்தி பேசவில்லை. நாம் ஆட்சேர்ப்பு, பல்கலைக்கழகத்தின் சுயாதீனம், பல்கலைக்கழகங்களை தனியார் மயமாக்கல் கல்வி மீதான பொதுச் செலவு என்பன பற்றியே கூடுதல் கவனம் செலுத்தினோம்.

இவ்விடயங்கள் ஆழமாக பேசப்பட வேண்டிய விடயங்கள். ஆயினும் அது நடப்பதில்லை என அவர் கூறினார். பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் உப தலைவர் வண. தம்பர அமில தேரர் தமது சங்கம் வேலை நிறுத்தத்தை நடத்தியே தீரும். என்ன நடந்தாலும் எத்தனை மிரட்டல் வந்தாலும் எம்மை தடுக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

Related Posts