மியாவ் ஆடியோ விழாவில் கமல்ஹாசன்-சிவகார்த்திகேயன்!

சின்னாஸ் பழனிச்சாமி இயக்கியுள்ள படம் மியாவ். ராஜா, காயத்ரி என்ற புதுமுகங்கள் நடித்துள்ள இப்படம் ஒரு பூனை பழிவாங்கும் கதையில் உருவாகியிருக்கிறது. செல்பி என்கிற பெர்சியன் ரக பூனைதான் இந்த படத்தில் சிலரை சஸ்பென்சாக பழிவாங்குகிறதாம். அந்த பூனை பழி வாங்கும் காட்சிகள் சம்பந்தப்பட்ட சிஜி ஒர்க் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மேலும், வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்துள்ள மியாவ் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறதாம்.

kamal-shiva-karththekeyan

இந்நிலையில், சமீபத்தில் இப்படம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை முடுக்கி விட்டுள்ள நிலையில், மார்ச் 19-ந்தேதி ஆடியோ விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்களாம். அந்த விழாவின்போது செல்பி என்ற பெர்சியன் ரக பூனை மிரட்டியுள்ள சில காட்சிகளையும் திரையிட்டு படத்திற்கு பரபரப்பு கூட்டப்போகிறார்களாம்.

Related Posts