வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்த வேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவும் இன்று வெள்ளிக்கிழமை யாழில் சில இடங்களில் மின்விநியோகம் தடைப்படும் என்று யாழ் பிரதேச மின் பொறியியாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று காலை 08.30 மணி தொடக்கம் மாலை 05.30 மணிவரை நவிண்டில் தாமோதரம் வித்தியாலயத்திலிருந்து இரும்பு மதவடி வரையான பிரதேசம், இயக்கச்சி சங்கத்தார்வயல் பிரதேசம் ஆகிய இடங்களிலும்
நாளை சனிக்கிழமை பிறவுண் வீதி, கஸ்தூரியார் வீதி, கன்னாதிட்டி, தட்டார்தெரு தொடக்கம் முட்டாஸ்கடைச் சந்தி வரையான பிரதேசம், மனோகரா பிரதேசம், கல்வியன்காடு, நல்லூர், அரியாலை, செம்மணி, நாவற்குழி, அச்சுவேலி இடைக்காடு, பத்தமேனி, வளலாய், தொண்டமனாறு வீதிப் பிரதேசம், இயக்கச்சி சங்கத்தார்வயல் பிரதேசம் ஆகிய இடங்களிலும் காலை 8.30 மணி தொடக்கம் 5.30 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரமேஸ்வரா சந்தி, பலாலி வீதி, விஞ்ஞானபீடப் பிரதேசம், அரசடி வீதி, கொழும்புத்துறை வீதி, ஈச்சமோட்டை, பாசையூர், குருநகர், கந்தர்மடம், ஆரியகுளம், ஸ்ரான்லி வீதி, வேம்படிப் பிரதேசம், கொன்வென்ட் பிரதேசம், பிரதான வீதி, வல்லை முதல் மந்திகை வரையயான வடமராட்சிப் பிரதேசம், இயக்கச்சி சங்கத்தார்வயல் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின்விநியோகம் தடைப்படும்.
அதேபோன்று 10 ஆம் தொண்டமனாறு வீதிப் பிரதேசம், குஞ்சர்கடைப் பிரதேசத்தின் ஒரு பகுதி, உடுப்பிட்டி, தொண்டைமனாறு, வல்வெட்டித்துறை, வல்வெட்டி, நவிண்டில், இயக்கச்சி சங்கத்தார்வயல் பிரதேசம் ஆகிய இடங்களிலும்
11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மானிப்பாய் ஈஞ்சை வைரவர் கோவில்ப் பிரதேசம், மாலுசந்தி, அல்வாய், வியாபாரிமூரலப் பிரதேசங்கள், நவிண்டில் தாமோதரம் வித்தியாலயத்திலிருந்து இரும்பு மதவடி வரையான பிரதேசம், இயக்கச்சி சங்கத்தார்வயல் பிரதேசம் ஆகிய இடங்களிலும்
12 ஆம் திகதி புதன்கிழமை அச்சுவேலி இடைக்காடு, பத்தமேனி, வளலாய், தொண்டமனாறு வீதிப் பிரதேசம், இயக்கச்சி சங்கத்தார்வயல் பிரதேசம் ஆகிய இடங்களிலும் காலை 8.30 மணி தொடக்கம் 5.30 மணிவரை மின் விநியோகம் தடைப்படும் என்று பிரதேச மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.