மின் தாக்கிய இளைஞர் பலி

dead-footயாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த இளைஞர் கோப்பாய் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

கொடிகாமம் கச்சாய் பகுதியைச் சேர்ந்த செல்வராஜா செந்தூரன் (வயது 19) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் குத்தகைக்கு மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்த இவர், கோப்பாய் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த வேளையிலேயே மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இதன்போது இவர் தலை கீழாக மரத்திலிருந்து நிலத்தில் விழுந்ததால், தலையின் பின்புறத்தில் பாரிய அடிகாயம் ஏற்பட்ட நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் வைத்தியசாலையில்

Related Posts