தற்சமயம் குறைக்கப்பட்டிருக்கும் மின் கட்டணம் எதிர்காலத்தில் மேலும் குறைக்கப்படுமென அரச ஊடகப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
சம்பூர் மின் நிலையத்தில் வேலைகள் பூர்த்தியானதும் மின் கட்டணம் மேலும் கணிசமாகக் குறையுமென எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் மின் அலகொன்றுக்கான கட்டணம் 8 ரூபா 25 சதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தை அதிக விலையில் கொள்வனவு செய்யும் ஒப்பந்தங்கள் எவையும் இனிமேல் நீடிக்கப்பட மாட்டா. மின் அலகொன்றை 40 ரூபா முதல் 60 ரூபா வரையான விலையில் கொள்வனவு செய்யும் ஒப்பந்தங்கள் 25 வருடகாலமாக அமுலில் உள்ளன. அவற்றின் கால எல்லை முடிவடைந்ததும் அந்த ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட மாட்டாது” – என்றார்.