மின் கட்டணத்தில் மாற்றம்!

திருத்தப்பட்ட இரண்டாவது மின் கட்டண திருத்தம் மின்கட்டணத்தை பொது பயன்பாட்டு ஆணையம் (PUCSL) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

மின்சார சபையின் முன்மொழிவுகளை மீளாய்வு செய்து, உரிய தரவுகளை ஆராய்ந்து, பொதுமக்களின் கருத்துக்களைக் கருத்திற்கொண்ட பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

அதன்படி இந்த ஆண்டுக்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் 22.5% என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது

இதன்படி, 30-60 வீட்டு மின் அலகு 20 ரூபாவில் இருந்து 9 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

30 அலகுகளை பயன்படுத்தும் நுகர்வோரின் மாதாந்த மின் கட்டணத்தின் பெறுமதி 390 ரூபாவிலிருந்து 280 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதுடன் ,60 யூனிட் பயன்படுத்தும் வாடிக்கையாளரின் மாதாந்திர மின் கட்டணம் 1,140 ரூபாயில் இருந்து 700 ரூபாயாக குறைந்துள்ளது.

மேலும் மத வழிபாட்டுத் தலங்களில் மின் கட்டணம் குறைக்கப்பட்டு ஒரு யூனிட்டின் விலை 6 ரூபாய் முதல் 90 யூனிட் வரை மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts