மின்சார விநியோக முறையை சரியாக சீரமைக்க மின்வெட்டை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனவே இன்று திங்கட்கிழமையும் (10) நாளை செவ்வாய்க்கிழமையும் (11) பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் கட்டம் கட்டமாக ஒன்றரை மணித்தியாலம் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.