மின்வெட்டு இல்லாமல் சீரான மின் விநியோகம், ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்

mahinda_rajapaksaயாழ். குடாநாட்டில் 24 மெகாவாற்ஸ் மின்சாரம் விநியோகம் எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சுன்னாகத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த மின்சார விநியோகத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இந்த விநியோகம் ஆரம்பமானதும் யாழ். குடாநாட்டுக்கு மின்வெட்டு இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்படும் எனவும் மின்சாரசபை அதிகாரி மேலும் கூறினார்.

தற்போது பிரதான வீதிகளின் அகலிப்புப் பணிகள் இடம்பெறுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் கம்பங்கள் பின்நகர்த்தப்பட்டு வருகின்றன.

இதனைவிட ஏற்கனவே இருந்த மின்கம்பங்களுக்குப் பதிலாக புதிய மின்கம் பங்களும் நடப்பட்டு மின் விநியோகப் பணிகள் சீராக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த 24 மெகாவாற்ஸ் மின்சாரம் குடாநாட்டுக்கு வழங்கப்பட்டாலும் லக்ஸபான மின்சாரத்தைக் கொண்டு வரும் பணிகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அதிகாரி மேலும் கூறினார்.

இந்த விநியோகம் ஆரம்பமானதும் யாழ். குடாநாட்டுக்கு மின்வெட்டு இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்படும்

Related Posts