மின்விநியோகம் துண்டிப்பு

யாழ்ப்பாணத்தில் உயர் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் பராமரிப்பு வேலைகள் செய்யும் பொருட்டும் வீதி அகலிப்புக்காக உயர் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியுள்ளதாலும் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய நிலையம் அறிவித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை உரும்பிராய், ஊரெழு பிரதேசங்களிலும் நாளை செவ்வாய்க்கிழமை, எதிர்வரும் வியாழக்கிழமை சனிக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை தென்மராட்சிப் பிரதேசம், சுன்னாகம், மல்லாகம், ஏழாலை, தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், குப்பிளான், மயிலங்காடு, காங்கேசன்துறை பகுதிகளிலும்

நாளைமறுதினம் புதன்கிழமை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பகுதிகளிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை கொட்டடி, நாவாந்துறை, மீனாட்சிபுரம், காக்கைதீவு, யாழ். பிரதான வீதியில் பண்ணை முதல் பஸ்ரியன் சந்தி வரையான பகுதிகளிலும் மின்விநியோகம் தடைப்படுமென இலங்கை மின்சார சபையின் யாழ். பிராந்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related Posts